கிளிநொச்சியில் நடைபெற்ற சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம்!

#Protest #Kilinochchi #Tamil People #78 Independence Day
Prasu
4 hours ago
கிளிநொச்சியில் நடைபெற்ற சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம்!

சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம் இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது. குறித்த போராட்டம் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமான குறித்த போராட்டம் A 9 வீதி ஊடாக டிப்போ சந்தி வரை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சிவில் அமைப்புக்கள், மதகுருமார், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

images/content-image/1770191039.jpg

போராட்ட பேரணி டிப்போ சந்தியை அண்மித்த போது, அப்பகுதியில் பிரத்தியேகமாக நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

குறித்த எதிர்ப்பு வலுப்பெறாமல் இருக்க பொலிசார் தீவிரமாக முயற்சித்தனர். இதன் போது முரண்பாடு ஏற்பட்டது. ஆனாலும் போராட்ட ஏற்பாட்டுக் குழுவினரின் தலையீட்டால் அமைதியாக பேரணியினர் கடந்து சென்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!