5 நாட்களுக்கு மூடப்படும் லண்டன் லிவர்பூல் ரயில் நிலையம்
#Railway
#London
#England
#Station
#closed
Prasu
5 hours ago
இங்கிலாந்தின் மிகவும் பரபரப்பான லண்டன் லிவர்பூல் ரயில் நிலையம் மார்ச் மாதத்தில் 5 நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் பணிகளுக்காக குறித்த ரயில் நிலையத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பின்படி, மார்ச் மாதம் 15, 21, 22, 28 மற்றும் 29ம் திகதிகளில் ரயில் நிலையம் மூடப்படும் என்றும் வார இறுதி நாட்களில் பயணிகள் அதிக சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட வழித்தடங்களுக்கு மாற்று பேருந்துகள் வழங்கப்படும் என்றும் பயணிகள் பயணம் செய்வதற்கு முன் தேசிய ரயில் அல்லது ரயில் ஆபரேட்டர் வலைத்தளங்களை பார்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
(வீடியோ இங்கே )