கிளிநொச்சி வைத்தியசாலை; தொடரும் நெருக்கடி - HNB வங்கி தலைமை அலுவலகம் வரை பகிரவும்

#Kilinochchi #Hospital #money #Patients
Prasu
3 hours ago
கிளிநொச்சி வைத்தியசாலை; தொடரும் நெருக்கடி - HNB வங்கி தலைமை அலுவலகம் வரை பகிரவும்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை நோயாளிகள் அவதிப்படும் நிலை தொடர்கின்றன. இது தனியே சாதாரண மக்களுக்கும் இடையே உள்ள பிரச்சினை மட்டுமல்ல. நோயாளிகள் அவதிப்படும் பிரச்சினை ஆகும். 

எனவே தான் அவசரத்திற்கு பணம் எடுக்க போகும் வைத்தியசாலை நோயாளிகள் அவதிப்படும் நிலை தொடர்கின்றன.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை HNB ATM மேசின் தொடர்ச்சியாக பழுது. அருகில் வேறு ATMற்கு செல்வதாக இருந்தால் 1.5 - 2km தூரம் தாண்டி செல்ல வேண்டும்.

இது அதிகம் வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகள் பயன்படுத்தும் ATM ஆகும். ஆனால் வருடத்தில் 365 நாட்கள் என்றால் 300 நாட்களுக்கு கிட்ட "இயந்திர கோளாறு காரணமாக இயங்கவில்லை" என்று காட்டும்.

images/content-image/1770485190.jpg

ATM Card போட்டு PIN நம்பர் அடித்து காசு தொகையும் தெரிவு செய்த பின்னர் "இயந்திர கோளாறு காரணமாக இயங்கவில்லை" என்று காட்டும். 

அப்படியே 10 - 20 பேர் முயற்சி செய்து கொண்டு திருப்பி செல்வார்கள். பிறகு சில நிமிடங்கள் ATM வேலை செய்யும். மறுபடியும் அதே போல் காட்டும். பல முறை வங்கிக்கு முறைப்பாடு செய்தும் எந்தவித மாற்றமும் இல்லை. 

ஆனால் யாரவது தொப்பி, ஹெல்மட் உடன் ATM உள்ளே நின்றால் அங்கே உள்ள சிறிய ஊடக "தொப்பியை கழற்றவும், ஹெல்மெட்டை கழற்றவும்" என்று கூறுவார்கள். 

நான் பல தடவைகள் தொலைபேசி ஊடக கிளிநொச்சி HNB வங்கிக்கு அறிவித்து உள்ளேன். அவர்கள் "அது வேற கம்பெனிக்கு ஒப்பந்தம் கொடுத்து உள்ளது, அவர்கள் தார் சர்விஸ் பார்க்கிறது" என்றும் "அவர்களுக்கு அறிவித்து உள்ளோம்" என்றும் கூறுவார்கள். 

மக்கள் தொடர்ச்சியாக முறைப்பாடு செய்வதாகவும் ஒப்புக் கொண்டார்கள். வங்கிகள் தமது ATM மெசின் Maintenance சேவையை இன்னொரு மூன்றாம் (3rd party) கம்பனிக்கு ஒப்பந்தம் ஊடக கொடுக்கின்றனர். 

இங்கே அவர்கள் சரியாக செய்யவில்லை என்றால் அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு HNB வங்கியின் முகாமைத்துவம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது வங்கியின் பொறுப்புக் கூறல் ஆகும்.

images/content-image/1770485092.jpg

கிளிநோச்சி வைத்தியசாலை அருகே வேறு எந்த வங்கி ATM மெசினும் இல்லை. இந்த இடம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு (DGH) சொந்தமானது. அந்த இடத்தை HNB வங்கிக்கு வைத்தியசாலை வழங்கி உள்ளது. 

எனவே குறித்த விடயம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை கவனத்தில் கொண்டு வங்கிக்கு அறிவித்து ATM மெசின் சீராக வேலை செய்கின்றதா என்பதை கவனிக்க வேண்டும். 

அவ்வாறு HNB வங்கி செய்ய தவறினால் வைத்தியசாலை HNB வங்கி ATM மெசினை அகற்றி வேறு வங்கி ATM போடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் அல்லது இன்னொரு வங்கி ATM போடுவதற்கு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.

இங்கே ATM சேவை சும்மா இலவசம் அல்ல. Withdrawal கட்டணம் வரை உள்ளது தானே. குறிப்பாக வேறு வங்கி ATM அட்டைக்கு 25 - 30/- வரை சேவை கட்டணம் அறவீடு செய்கிறார்கள். அது பொதுவானது தான். 

ஆனால் சேவை தான் மோசமாக உள்ளது. நான் கூறும் குற்றசாட்டு உண்மை இல்லை என்று HNB வங்கி மறுத்தால் வீடியோகள் உடன் ஆதாரங்களை போடுவதற்கு நான் தயார். இந்த ATM -இல் இவ்வாறான சிமரத்தை அனுபவித்தவர்கள் பலர் உள்ளனர். இங்கே பார்பவர்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளையும் கூறுங்கள்.

நன்றி 

முகநூல் -த. கிருஷ்ணா

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!