நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்கவும் தயார் - ஸ்ரீதரன் அதிரடி!

#SriLanka #M. A. Sumanthiran #Sridaran_MP #IlankaThamilarasukKadsi
Thamilini
4 hours ago
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்கவும் தயார் - ஸ்ரீதரன் அதிரடி!

இராணுவ அதிகாரிகளை நியமிக்க வாக்களித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், தனது  நாடாளுமன்றப் பதவியை துறக்க  தயாராக இருப்பதாக  ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். 

 புதிய கணக்காய்வாளர் ஜெனரலை நியமிப்பதற்கான வாக்கெடுப்பின் போது முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவருக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கூறி, கட்சி முன்வைத்த குற்றச்சாட்டுகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, அவர் இந்த கருத்தை முன்வைத்துள்ளார். 

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், தனது பதவியை பறித்த முடிவு நியாயமற்றது என்றும்  தெரிவித்துள்ளார். 

 ஸ்ரீதரன்  முன்னர் எட்டு சந்தர்ப்பங்களில் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில்  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கேள்வி எழுப்பியிருந்தது. 

 இதன் விளைவாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில்   ஸ்ரீதரன் நீக்கப்பட்டு, அந்தப் பதவிக்கு இராசமன்னிக்கம் சாணக்கியன் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!