ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை!

#SriLanka #President #Fund #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
4 hours ago
ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.

இந்த நிர்வாக சபையானது ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதி செயலாளர் மற்றும் ஜனாதிபதியால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்கள் உட்பட 07 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் இந்தக் கலந்துரையாடலில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமானாயக்க, ஜனாதிபதி நிதியத்தின் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரொஷான் கமகே, பேராசிரியர் ஜே.ஆர்.பி. ஜயகொடி, முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் சரத் சந்திரசிறி மாயாதுன்ன மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!