சமூகத்தின் வேண்டுகோளுக்கு இணங்கவே புதிய கல்விச் சீர்திருத்தம் - ஹரிணி!

#SriLanka #education #ADDA #Harini Amarasooriya #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
சமூகத்தின் வேண்டுகோளுக்கு இணங்கவே புதிய கல்விச் சீர்திருத்தம் - ஹரிணி!

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளின் போது, கொழும்பிலிருந்து கொண்டு கிராமங்கள் பற்றிய தீர்மானங்களை எடுக்கப்போவதில்லை என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

புதிய கல்விச் சீர்திருத்தம் மற்றும் கல்விப் பிரச்சினைகள் தொடர்பாக ஹம்பாந்தோட்டை மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் பெப்ரவரி 12ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து 2025ஆம் ஆண்டு முதல் நாம் கலந்துரையாடி, தரவுகளைச் சேகரித்துத் தயாராகி வந்தோம். அதில் அதிகாரிகள் என்ற ரீதியில் நீங்கள் மிகுந்த ஆர்வத்துடன் எமக்கு ஒத்துழைப்பு வழங்கினீர்கள்.

நாம் ஆரம்பித்துள்ளது ஒரு கடினமான,நீண்ட பயணம். எதிர்காலத்திலும் உங்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். சமூகத்தின் வேண்டுகோளுக்கு இணங்கவே புதிய கல்விச் சீர்திருத்தங்களை நாம் ஆரம்பித்தோம். பலர் இதற்காகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் முயற்சித்தனர். 

எமது அரசியல் நீரோட்டத்தில் நாம் புரிந்துகொண்ட விடயம் என்னவென்றால், இந்நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதாகும். 

எமது பெறுமதியான சொத்து மனித வளமே. அந்த வளத்தை நாம் சரியாகக் கட்டியெழுப்ப வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!