சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநர் இலங்கை வருகை!
#SriLanka
#IMF
#Kristalina Georgieva
#Visit
Thamilini
1 month ago
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, பிப்ரவரி 16 முதல் 18, வரை இலங்கைக்கு வருகை தருவார் என்று IMF இன் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த விஜயத்தின் போது, அவர் அரசாங்க அதிகாரிகள் மற்றும் முக்கிய பங்குதாரர்களைச் சந்திப்பார் எனவும், தித்வா சூறாவளியின் தாக்கத்தை நேரடியாகக் கவனிப்பார் எனவும் கூறப்படுகிறது.
மேலும் IMF மீட்பு முயற்சிகளை ஆதரிக்கக்கூடிய வழிகளைப் பற்றி விவாதிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து இலங்கையர்களுக்கும் மிகவும் மீள்தன்மை கொண்ட எதிர்காலத்தை உருவாக்க பங்களிப்பார் எனவும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.