14 ஆண்டுகளுக்கு பின் அவசரமாக ஒன்றுக்கூடும் இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம்!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
14 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தின் (BASL) பொதுக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஷ
இந்த அறிவிப்பை சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய வெளியிட்டுள்ளார்.
அக்குரேகொட துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதற்காக இன்று (14) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் இது தொடர்பில் தெளிவுப்படுத்தியுள்ளார்.
இதேவேளை
நேற்று (13) அக்குரேகொடவில் அடையாளம் தெரியாத தாக்குதல் குழுவினரால் ஒரு வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட துயர சம்பவத்தை இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம் (BASL) கடுமையாகக் கண்டித்துள்ளது.