எப்ஸ்டீன் விவகாரத்தில் சிக்கிய புகழ்பெற்ற கனடிய இயற்பியல் பேராசிரியர்

#Canada #America #University #Epstein Files
Prasu
4 months ago
எப்ஸ்டீன் விவகாரத்தில் சிக்கிய புகழ்பெற்ற கனடிய இயற்பியல் பேராசிரியர்

அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜிப்ரி எப்ஸ்டீன் தொடர்பான புதிய ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, கனடாவில் பணியாற்றியுள்ள புகழ்பெற்ற கோட்பாட்டு இயற்பியலாளர் லீ ஸ்மோலின் தனது பணிப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விலகும் தீர்மானத்தை எடுத்துள்ளார்.

ஒன்டாரியோ மாகாணத்தின் வாட்டர்லூவில் செயல்படும் உலகப் புகழ்பெற்ற இயற்பியல் கோட்பாட்டு பல்கலைக்கழகமான பிரிமீட்டரின், நிறுவனர் பேராசிரியர்களில் ஒருவராக இருந்த ஸ்மோலின், தற்காலிகமாக விலக தீர்மானித்துள்ளார்.

இந்த விடயத்தை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மார்செலா கரினால மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நீதித்துறை துறை வெளியிட்ட கோடிக்கணக்கான புதிய ஆவணங்களில் ஸ்மோலின் மற்றும் எப்ஸ்டீன் இடையேயான மின்னஞ்சல் தொடர்புகள் இடம்பெற்றுள்ளன.

ஸ்மோலின் எந்தவித சட்டவிரோத செயலிலும் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. எனினும், எப்ஸ்டீன் 2008ம் ஆண்டு சிறாரிடம் விபச்சார கோரிக்கை வைத்த குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னரும், அவர்களுக்கிடையேயான தொடர்பு தொடர்ந்ததாக பதிவுகள் காட்டுகின்றன.

2009 முதல் 2013 வரை இருவரும் மின்னஞ்சல், தொலைபேசி உரையாடல் மற்றும் சந்திப்புக்களை தொடர்ந்தனர் என ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4