O/L பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு விசேட சலுகை!
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இறுதி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 3,545 பரீட்சை நிலையங்களில் பரீட்சை இடம்பெறவுள்ளன.
மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் பொலிஸ் மற்றும் முப்படைகளின் ஒத்துழைப்புடன் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஏதேனும் அவசர நிலைகள் ஏற்பட்டால் அவற்றை எதிர்கொள்ளவும், போக்குவரத்து வசதிகள் குன்றிய பகுதிகளிலுள்ள மாணவர்களை பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
டிட்வா சூறாவளி காரணமாக தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட கட்டாய ஆவணங்களை இழந்த மாணவர்களுக்காக விசேட சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அடையாள அட்டையை இழந்த மாணவர்கள், கடவுச்சீட்டு அளவிலான இரண்டு புகைப்படங்களை சமர்ப்பித்து பரீட்சைக்குத் தோற்ற முடியும் எனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்