இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இன்று பலப்பரீட்சை!

#SriLanka #Australia #sports #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 months ago
இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இன்று பலப்பரீட்சை!

இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2026 இருபது20 உலகக் கோப்பை போட்டி இன்று (16) இரவு 7:00 மணிக்கு நுவரெலியாவில் உள்ள பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்க உள்ளது. 

 இலங்கை அணியை தாசுன் ஷனகா வழிநடத்துவார், ஆஸ்திரேலிய அணியை மிட்செல் மார்ஷ் வழிநடத்துவார். 

 இந்தப் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றால், குழு B இன் கீழ் சூப்பர் எட்டு சுற்றுக்கு தகுதி பெறும். அந்தக் குழுவில் புள்ளிகள் பட்டியலில் அவர்கள் தற்போது முதலிடத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி சூப்பர் எட்டு சுற்றில் நீடிக்க இந்த போட்டியில் வெற்றி பெறுவது கட்டாயமாகும்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4