டேவிட் லாமி மற்றும் அனுர குமாரவிற்கு இடையில் சந்திப்பு!

#SriLanka #AnuraKumaraDissanayake #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
டேவிட் லாமி மற்றும் அனுர குமாரவிற்கு இடையில் சந்திப்பு!

ஐக்கிய இராச்சியத்தின் துணைப் பிரதமர் டேவிட் லாம்மியின் வருகை சரியான நேரத்தில் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

இலங்கையின் மீட்சியில் சர்வதேச நம்பிக்கையை வலுப்படுத்த இது உதவுகிறது என்றும் லாமியின் விஜயம் அந்த கோட்பாட்டை அடிகோடிட்டு காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (17) காலை ஐக்கிய இராச்சியத்தின் துணைப் பிரதமரும் நீதித்துறை இராஜாங்கச் செயலாளருமான டேவிட் லாம்மி மற்றும் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

இலங்கை ஜவுளி ஏற்றுமதிகளுக்கு வரி இல்லாத அணுகலை வழங்குவதற்கான ஐக்கிய இராச்சியத்தின் முடிவுக்கும் ஜனாதிபதி நன்றி கூறினார். 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!