ரூபாய் 5 ஆயிரத்தை கையூடலாக பெற்ற நீதிபதி கைது!
வாழைச்சேனையில் உள்ள கோறளைப்பற்று பகுதியில் கடமையாற்றும் நீதிபதி ஒருவர் 5000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC) நேற்று அவரை கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஓட்டமாவடியைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்ட மனைவி குழந்தை பராமரிப்பு கொடுப்பனவுகள் கோரி பராமரிப்பு வழக்கு தொடர்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
முறைப்பட்டாளர் தேவையான கொடுப்பனவுகளைச் செய்யத் தவறியதால், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு எதிராக திறந்த பிடியாணையை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் திறந்த பிடியாணையை இரத்து செய்ய வேண்டி குறித்த வழக்கின் சான்றளிக்கப்பட்ட நகலை வழங்க மேற்படி நீதிபதி 5,000 ரூபாயை லஞ்சமாக பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்