பிரித்தானியாவில் வேகமாக பரவி வரும் தொற்று நோய்

#Death #Disease #Warning #England
Prasu
3 months ago
பிரித்தானியாவில் வேகமாக பரவி வரும் தொற்று நோய்

கேப் வெர்டே தீவுகளில் இருந்து நாடு திரும்பிய பிரித்தானிய சுற்றுலா பயணிகளிடையே ஷிகெல்லா என்ற தொற்றுகள் அதிகரித்து வருவதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த தீவுக்கு பயணம் செய்த நான்கு பிரித்தானியர்கள் இரைப்பை நோயால் உயிரிழந்ததை தொடர்ந்து ஷிகெல்லா தொற்று குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.

அக்டோபர் 2025 முதல் 109 தொற்றுக்கள் பிரித்தானியாவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது கேப் வெர்டே தீவுகளுக்கு பயணம் செய்வதோடு தொடர்புப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஷிகெல்லா பாக்டீரியா கடுமையான வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் வயிற்றுப் பிடிப்பை ஏற்படுத்துகிறது, இது அசுத்தமான மலம், உணவு அல்லது தண்ணீர் காரணமாக பரவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4