நிதி மோசடி குற்றச்சாட்டில் சிக்கிய அனில் அம்பானி

#India #monkey #Fraud #HighCourt
Prasu
4 months ago
நிதி மோசடி குற்றச்சாட்டில் சிக்கிய அனில் அம்பானி

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உட்பட அனில் அம்பானியின் பல்வேறு நிறுவனங்கள் வங்கிகளில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாதது, கடன் பணத்தில் முறைகேடாக வெளிநாடுகளில் சொத்துகளை வாங்கியமை உள்ளிட்ட நிதி மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இதுதொடர்பில் அனில் அம்பானி குடும்பத்தினா் மற்றும் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் சிலா் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

மேலும், உச்ச நீதிமன்றிலும் வழக்கு நிலுவையில் உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அனில் அம்பானி குழுமத்திற்குச் சொந்தமான 12,000 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துக்களையும் அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

இந்த நிலையில் அனில் அம்பானிக்கு அமலாக்கத் துறை புதிய சம்மனை அனுப்பியது. 

நிதி மோசடி தொடர்பான வழக்கில் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் அனில் அம்பானி ஒரு முறை அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4