கனடாவில் 5 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தாக்கும் நிமோனியா

#Canada #children #Disease #Warning #Pneumonia
Prasu
3 months ago
கனடாவில் 5 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தாக்கும் நிமோனியா

கனடாவில் கடந்த ஆண்டில் நிமோனியா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சுமார் 30 வீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதில் குறிப்பாக 5 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த வயது பிரிவில் நிமோனியா காரணமான அனுமதிகள் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இருமடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளன.

தொற்றுநோய் நிபுணர் மருத்துவர் ஜெஸ்ஸி பாப்பன்பர்க், 2024–2025 சுவாச நோய் பருவம் நிமோனியா நோயாளிகளால் மிகப் பரபரப்பாக இருந்தது என்பதை புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

கடந்த ஆண்டின் கடுமையான காய்ச்சல் (flu) பரவல், நிமோனியா அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. 

வைரஸ் மூலம் ஏற்படும் நிமோனியா, காய்ச்சலின் ஒரு தீவிர விளைவாக அமையக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4