ஆண்ட்ரூவை வாரிசு உரிமையில் இருந்து நீக்க தீர்மானம்!
#SriLanka
#KingCharles
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சரை வாரிசுரிமை வரிசையில் இருந்து நீக்குவதற்கான சட்டத்தை பரிசீலித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் மீதான காவல்துறை விசாரணையின் முடிவு என்னவாக இருந்தாலும், எதிர்காலத்தில் ஆண்ட்ரூ மன்னராவதைத் தடுக்க இந்த நடவடிக்கையை எடுப்பது சரியானது என்று பாதுகாப்புச் செயலாளர் லூக் போலார்ட் கூறியுள்ளார்.
குழந்தை பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் குறித்த அழுத்தத்தின் மத்தியில் ஆண்ட்ரூவின் அரச பட்டங்கள் பறிக்கப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து மேற்படி நடவடிக்கை எடுக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்