இந்திய மத்திய அரசின் பங்கு, கொள்கைரீதியாக இலங்கை அகதிகள் விடயத்தில் முக்கியம் வாய்ந்தது! ஆனால் அதை செய்ய தவறவிட்டனரா?

#India #SriLanka #government #Article #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Shelva
2 hours ago
இந்திய மத்திய அரசின் பங்கு, கொள்கைரீதியாக இலங்கை அகதிகள் விடயத்தில் முக்கியம் வாய்ந்தது! ஆனால் அதை செய்ய தவறவிட்டனரா?

பிரபலமான தமிழ் விவாத நிகழ்ச்சியான அரட்டை அரங்கம் [“Arattai Arangam”,“tamil debate TV show”] நிகழ்ச்சியில், தொகுப்பாளர் T. இராஜேந்தர் [“tamil actor director”] முன்னிலையில் ஒளிபரப்பான ஒரு பகுதி, இலங்கைத் தமிழ் அகதிகள் எதிர்கொண்ட மனிதாபிமான சவால்களை மீண்டும் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில், இலங்கைத் தமிழ் அகதிகள் தங்கள் தாயகத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை, குடும்ப இழப்புகள், முகாம்களில் நீண்டகாலம் வாழ்ந்த அனுபவங்கள் மற்றும் வேலை, கல்வி, அடையாளம் தொடர்பான சிரமங்களை உணர்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர். நிகழ்ச்சியின் இறுதியில் இடம்பெற்ற கண்ணீர் நிறைந்த பகுதி, நீண்டகால அகதி வாழ்க்கையின் மனநிலையை வெளிப்படுத்துவதாகக் காணப்படுகிறது.

இந்தியாவில் உள்ள தமிழர்கள் வழங்கிய மனிதநேய ஆதரவு குறிப்பிடத்தக்கதாகும். எனினும், நீண்டகால கொள்கைத் தீர்வுகள் தொடர்பாக இந்திய மத்திய அரசின் அணுகுமுறை குறித்து மறுபரிசீலனை தேவையா என்ற கேள்வி பல தரப்புகளில் எழுந்து வருகிறது.

உலகின் பல பகுதிகளில் இருந்து மேற்கத்திய நாடுகளுக்கு அகதிகளாக சென்ற குடும்பங்களின் பிள்ளைகள் இன்று உயர்கல்வி மற்றும் தொழில்முறை துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளனர். இதேவேளை, இந்தியாவில் நீண்டகாலமாக தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளின் சமூக, முக்கியமாக அவர்களுடைய வாழ்க்கை, எதிர்கால நிலைமைகளை தொடர்ந்தும் சவால்களுக்குள் உட்படுத்தியிருப்பதை இந்தச் சிறுமியின் கண்ணீர்கதை தெளிவாக்குகிறது.

இந்திய நிதியமைச்சர் மதிப்புமிகு நிர்மலா சீதாராமன் மிகவும் ஆளுமைமிக்கவர்; இலங்கையின் வடக்கு–கிழக்கில் அதிகம் விஜயம் செய்தவர். இலங்கையின் இனப்பாகுபாடு மற்றும் இலங்கை நிலைமைகளை நன்றாகத் தெரிந்தவர். பாடல்பெற்ற திருத்தலமான திருக்கோணேஸ்வரத்திற்கு ஒரு சைவ பிராமண குருக்கள் தேவையென்பதைக்கூட துல்லியமாக ஆராய்ந்து நிவர்த்தி செய்யக்கூடிய அளவிற்கு இலங்கையை நன்றாகத்தெரிந்தவர்.

ஏனைய மேற்கத்திய நாடுகள், சொந்த நாடுகளில் பயத்தால் வெளியேறியவர்களை கண்ணியமாக நடத்தி, அவர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமைகளுடன் வாழக்கூடிய நிலை உருவாக்கியதைப் போல, இந்தியாவும் ஐநா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அமைப்பின் விதிகளுக்கமைய நடைமுறைப்படுத்தியிருக்கலாம். அப்படி செய்வதற்கான வளங்கள் இல்லாவிடின், ஐநா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அமைப்பினரிடம் தங்களுடைய இயலாமையை வெளிப்படுத்தி, இந்தியாவில் இருக்கும் இலங்கையர்களை வெளிநாடுகளில் குடியமர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், மக்கள் பல ஆண்டுகளாக அனுபவித்த அல்லது எதிர்நோக்கிய அவலங்களிலிருந்து விடுதலை பெற்றிருப்பார்கள்.

இந்த விடயம் மனிதாபிமான பார்வையில் தொடர்ந்து கவனிக்கப்பட வேண்டிய கொள்கைத் துறை செயற்பாடாகும்.

பிரத்தியேக செய்தி,

 இரவீந்திரராசா (மனிதாபிமான பணியில் அரசியல் ஆய்வாளர் சிட்னியில் இருந்து)

(முன்னாள் சிறுவர்கள் பாதுகாப்பு நிதியம் ஐக்கிய இராச்சியம் (இலங்கை), உதவி மாவட்ட இணைப்பாளர். முன்னாள் ஐநா உலக உணவுத்திட்ட பாடசாலை உணவு ஊட்டச்சத்து திட்ட முகாமையாளர்.

  Mobile/ WhatsApp:- 0061 424 674 642.

 Email: ravi.anandarajah@gmail.com

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!