சொந்த மண்ணில் தோல்வியை தழுவிய இலங்கை அணி!

#SriLanka #sports
Thamilini
3 months ago
சொந்த மண்ணில்  தோல்வியை தழுவிய இலங்கை அணி!

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கிண்ண போட்டியில் இலங்கை அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

 பல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில்சகல விக்கெட்டுக்களையும் இழந்து 146 ஓட்டங்களை பெற்றது. 

 இந்நிலையில் 147 என்ற இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 16.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 95 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

இதன்படி 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியை தழுவியது. 

 இந்த தோல்வி, டி20 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இலங்கை அணி ஆறாவது முறையாக தோல்வியடைந்ததைக் குறிக்கிறது.

 இன்றைய போட்டி உட்பட, டி20 உலகக் கோப்பையில் இரு நாடுகளுக்கும் இடையே 7 போட்டிகள் நடந்துள்ளன, அவற்றில் இலங்கை அணி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!