சூப்பர் 8 சுற்றில் முதல் தோல்வியை பதிவு செய்த இந்திய அணி

#India #T20 #Cricket #WorldCup #SouthAfrica
Prasu
4 months ago
சூப்பர் 8 சுற்றில் முதல் தோல்வியை பதிவு செய்த இந்திய அணி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.

அந்தவகையில், சூப்பர் 8 சுற்றின் மூன்றாவது போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதின.

அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களுக்கு 187 ஓட்டங்கள் குவித்தது.

அதிரடியாக விளையாடிய ப்ரேவிஸ் 45 ஓட்டங்களும் மில்லர் 63 ஓட்டங்களும் ஸ்டப்ஸ் 44 ஓட்டங்களும் குவித்தனர்.

இதையடுத்து 188 ஓட்ட இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த 111 ஓட்டங்கள் மட்டுமே பெற்றது.

இதன்மூலம் 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4