இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் விபத்துக்குள்ளான விமானம் - 7 பேர் மரணம்

#India #Death #Flight #Accident
Prasu
4 months ago
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் விபத்துக்குள்ளான விமானம் - 7 பேர் மரணம்

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் சத்ரா மாவட்டத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரெட்பேர்ட் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான நோயாளர் விமான ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விமானம் ராஞ்சி விமான நிலையத்திலிருந்து புதுடெல்லி நோக்கிப் பயணத்தை ஆரம்பித்து ரேடார் அமைப்பிலிருந்து திடீரென மறைந்துள்ளது.

அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த விமானம் அடர்ந்த காட்டுப் பகுதியில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

விபத்து ஒன்றில் 63 சதவீத தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 41 வயது மதிக்கத்தக்க நோயாளி ஒருவரை மேலதிக சிகிச்சைக்காக புதுடெல்லிக்கு அழைத்துச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் விமானத்தில் பயணித்த ஒரு மருத்துவர், ஒரு தாதியர், 2 உதவியாளர்கள், 2 விமானிகள் என மொத்தம் 7 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4