பிறந்தநாளை முன்னிட்டு புதிய படத்தின் பெயரை வெளியிட்ட நானி

#Cinema #Actor #Birthday #Movie
Prasu
3 months ago
பிறந்தநாளை முன்னிட்டு புதிய படத்தின் பெயரை வெளியிட்ட நானி

தெலுங்கு சினிமாவில் நேச்சுரல் ஸ்டார் என்று கொண்டாடப்படுபவர் நானி தற்போது தி பாரடைஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இன்று 42 வயதை எட்டியுள்ள நானி, பிறந்தநாளை முன்னிட்டு, தனது 32 வது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி இந்த படத்திற்கு பிளடி ரோமியோ என பெயரிடப்பட்டுள்ளது. பவன் கல்யாணின் ஓஜி படத்தை இயக்கிய சுஜித் இந்த படத்தை இயக்குகிறார்.

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. கதாநாயகியாக திரிப்தி திம்ரி அல்லது பூஜா ஹெக்டே ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.

மலையாள முன்னணி நடிகர் பிருத்விராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகப் கூறப்படுகிறது.

படத்தின் டைட்டில் அறிமுக வீடியோ லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ பட பாணியிலும் இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4