யாழின் போக்குவரத்து சேவைகள் குறித்து விசேட ஆராய்வு!

#SriLanka #Jaffna #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
யாழின் போக்குவரத்து சேவைகள் குறித்து விசேட ஆராய்வு!

போக்குவரத்து பெருந் தெருக்கள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் இணைந்து நடத்தும் உள்ளூர் போக்குவரத்துச் சேவைகளை ஒழுங்குபடுத்தல் பிராமணங்கள் தொடர்பான அறிவூட்டல் கலந்துரையாடல் இன்று காலை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பாடசாலை மாணவர்களுக்கான இலகு போக்குவரத்து சேவை குறித்தும், பொது மக்களின் நாளாந்த சேவை பெறுதலை தடையின்றி உறுதிப்படுத்துவதும், அது தொடர்பில் இருக்கின்ற சாதக பாதக நிலைமைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

மேலும் சாரதிகள் நடத்துனர்களுக்கு சீருடை, GPS சாதனம் பொருத்தல், சிசு செரிய, கெமி செரிய, நசி செரிய சேவைகளின் போன்றவற்றின் பலன்கள், அது தொடர்பால மானியங்கள் கிடைக்காமை போன்ற விடயங்கள் ஆராயப்பட்டதுடன் அதைப் பெறுவதில் இருக்கின்ற தடைகள் குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.

மாவட்ட செயலர் ம.பிரதீபன் ஒழுங்குபடுத்தலில் மூன்று பிரதான விடயங்களை முன்னிறுத்தி ஆராயப்பட்ட குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின், ஆணையாளர், துறைசார் அதிகாரிகள், யாழ் மாவட்ட அரச, தனியார் போக்குவரத்து சேவை சாலைகளின் அதிகாரிகள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள், மாவட்டத்தின் மேலதிக அரச அதிபர், பிரதேச செயலர்கள், உதவி பிரதேச செயலர்கள் என சமூக மக்களுடன் நெருக்கமான தொடர்பை கொண்டுள்ள அதிகாரிகள் பலரது பிரசன்னத்துடன் நடைபெற்றது.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!