பிரித்தானியாவில் கட்டாயமாக்கப்படும் மின்னணு பயண அனுமதி
#Airport
#England
#Passenger
#Visa
Prasu
2 weeks ago
பிரித்தானியாவுக்கு பயணிக்கும் சில குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் மின்னணு பயண அனுமதி ஒன்றை வைத்திருப்பது கட்டாயமாக்கப்படுகிறது.
பிரான்ஸ், அமெரிக்கா, கனடா உட்பட 85 நாடுகளைச் சேர்ந்தவர்கள், முன்கூட்டியே அனுமதி பெறவில்லையென்றால் பிரித்தானியாவுக்குள் நுழையமுடியாது.
அவர்கள், மின்னணு பயண அங்கீகாரம் என்னும் அனுமதியை முன்கூட்டியே பெற்றிருக்கவேண்டும். இரண்டு ஆண்டுகள் செல்லுபடியாகும் இந்த மின்னணு பயண அங்கீகாரத்துக்கான கட்டணம் 16 பவுண்டுகள் ஆகும்.
ஆனால், விரைவில் அதை 20 பவுண்டுகளாக உயர்த்த பிரித்தானிய உள்துறை அலுவலகம் திட்டமிட்டுவருகிறது.
பிரித்தானியாவுக்கு பயணிப்பவர்கள் மட்டுமின்றி, பிரித்தானியா வழியாக வேறு நாடுகளுக்கு தங்கள் பயணத்தை தொடர்பவர்களுக்கும் இந்த விதி பொருந்தும்.
(வீடியோ இங்கே )