டி20 உலக கோப்பை தொடரில் இருந்து இலங்கை அணி வெளியேற்றம்

#SriLanka #Newzealand #T20 #Cricket #WorldCup
Prasu
4 months ago
டி20 உலக கோப்பை தொடரில் இருந்து இலங்கை அணி வெளியேற்றம்

உலக கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 61 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. 

முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது.

நியூசிலாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ரச்சின் ரவிந்திரா 32 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்து ஆட்டமிழந்தார். 

இந்நிலையில் 169 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 107 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது. 

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் கமிந்து மெண்டிஸ் 31 ஓட்டங்களையும், துனித் வெல்லாலகே 29 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர். 

இதன்மூலம் 2026ம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலக கிண்ணத் தொடரில் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை இலங்கை அணி இழந்தமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4