கமல் மற்றும் ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் பிரபல மலையாள நடிகர்
#TamilCinema
#Kamal
#rajini kanth
#Movie
#L4
Prasu
3 hours ago
ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்ப்பில் இன்பன் உதயநிதி தயாரிப்பில் 47 வருடங்களுக்குப் பிறகு ரஜினி மற்றும் கமல் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர்.
தற்சமயம் KHxRK என பெயர் பெற்றுள்ள இந்த திரைப்படத்தின் புரோமோ வீடியோ கடந்த வாரம் வெளியானது. இது மக்கள் இடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், கமல்ஹாசன், ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் படத்தில் பிரபல மலையாள நடிகரான மம்முட்டி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(வீடியோ இங்கே )