டி20 உலக கோப்பை தொடர் - அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற இந்திய அணி
டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடின.
இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களுக்கு 195 ஓட்டங்கள் பெற்றது. சேஸ் 40 ஓட்டங்களும் ஹோப் 32 ஓட்டங்களும் ஹெட்மயர் 27 ஓட்டங்களும் குவித்தனர்.
இதையடுத்து 196 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்கள் பெற்று வெற்றி பெற்றது.
இந்திய அணி சார்பில் திலக் வர்மா 27 ஓட்டங்களும் சஞ்சு சாம்சன் 97 ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இதன்மூலம் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா அணிகள் மோத உள்ளன.
(வீடியோ இங்கே )