தெஹ்ரான் மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மரணம்

#Death #Attack #Israel #Iran #Former President
Prasu
3 hours ago
தெஹ்ரான் மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மரணம்

தனது மோதல் பேச்சு வார்த்தை மற்றும் தெஹ்ரானின் அணு ஆயுத எதிர்ப்பில் பங்கு வகித்ததற்காக அறியப்பட்ட ஈரானிய முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத், சனிக்கிழமை ஈரானுக்குள் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களின் போது கொல்லப்பட்டுள்ளார்.

வடகிழக்கு தெஹ்ரானின் நர்மக் பகுதியில் அமைந்துள்ள அஹ்மதிநெஜாட்டின் உத்தியோகபூர்வ இல்லத்தை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரிகள் பலரும் உயிரிழந்துள்ளமையை ஈரானிய ஊடக நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

2005ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை ஈரானின் ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர் மஹ்மூத் அஹ்மதிநெஜாட்.

மஹ்மூத் அஹ்மதிநெஜாட் ஜனாதிபதியாகப் பதவியேற்பதற்கு முன்னர், அர்டபில் மாகாணத்தின் ஆளுநராகவும், தெஹ்ரான் நகர மேயராகவும் பணியாற்றியிருந்தார். 

அவரது ஜனாதிபதி பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனியால் அவர் 'வியூக ஆலோசனைச் சபையின்' உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!