டெக்சாஸில் இருவர் சுட்டுக்கொலை: பயங்கரவாத தாக்குதல் என சந்தேகம்

#Death #Police #America #world_news #War #GunShoot #ImportantNews #news #ADDA #ADDAADS #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Lakhi
2 hours ago
டெக்சாஸில் இருவர் சுட்டுக்கொலை: பயங்கரவாத தாக்குதல் என சந்தேகம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் ஒஸ்டின் நகரில் உள்ள மதுபான விடுதிக்கு வெளியே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டதோடு, 14 பேர் காயமடைந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் குறித்த விடுதிக்கு வெளியே சிற்றூந்தொன்றில் வந்த நபர் ஒருவர், அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் நடத்திய பதில் தாக்குதலில் சந்தேக நபர் கொல்லப்பட்டார்.

காயமடைந்தவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. சுட்டுக் கொல்லப்பட்ட சந்தேக நபர், செனகல் நாட்டில் பிறந்து அமெரிக்கக் குடியுரிமை பெற்ற ஒருவரென அடையாளம் காணப்பட்டுள்ளார். தாக்குதலின் போது அவரது வாகனத்தில் கண்டெடுக்கப்பட்ட சில சான்றுகள் இந்தத் தாக்குதலுக்கும் பயங்கரவாதத்திற்கும் தொடர்பிருக்கலாம் என சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் எப்.பி.ஐ (FBI) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், தாக்குதலுக்கான துல்லியமான காரணம் குறித்து புலனாய்வு அமைப்புகள் தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருகின்றன. இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது கவலையை வெளியிட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!