பதவி விலகும் பிஹார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார்

#India #Election #Resign #ChiefMinister #L4
Prasu
4 months ago
பதவி விலகும் பிஹார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார்

பிஹார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் விரைவில் பதவி துறக்க உள்ளார் என அறியப்படுகிறது.

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் நோக்கிலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் பிஹாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 2 இடங்களில் வெற்றி பெறும் சாத்தியம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒரு தொகுதியில் மத்திய அமைச்சர் ராம்நாத் தாக்கூர் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. மற்றைய தொகுதியிலேயே நிதிஷ் குமார் போட்டியிடுவார் எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் துணை முதல்வராகப் பொறுப்பேற்பார் எனவும் பா.ஜ.கவை சேர்ந்த ஒருவர் அடுத்த முதல்வராக பதவியேற்பார் எனவும் தெரியவருகின்றது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4