ரூ.243.8 மில்லியன் சொத்து: சஜின் வாஸ் குணவர்தன கைது!
#SriLanka
#Arrest
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
#L4
Abi
12 hours ago
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, சட்டவிரோத சொத்துக்களைச் சேர்த்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இன்று (09) கையூட்டல் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத சொத்துக்கள் ஈட்டியது தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக, இன்று முற்பகல் அவர் கையூட்டல் ஆணைக்குழுவுக்கு வருகை தந்திருந்தார்.
வாக்குமூலம் வழங்க வந்திருந்த வேளையிலேயே, விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.
சுமார் 243.8 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோதமான முறையில் ஈட்டியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்