ஆயுதங்கள், போதைப்பொருட்களுடன் படகு சிக்கியது!
#SriLanka
#Weapons
#drugs
#Boat
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
#L4
Abi
2 months ago
இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகள் மற்றும் ஆயுதங்களை ஏற்றிச் சென்ற பல நெடுநாள் மீன்பிடி படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையொன்றின் போது,சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த இந்த படகினை சோதனையிட்ட போதே இந்த சட்டவிரோத பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
தற்போது குறித்த படகு மற்றும் அதிலிருந்த பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காகவும், சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்காகவும் கரைக்கு கொண்டு வரப்படுவதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்