இந்தியாவில் முதல் முறையாக கருணை கொலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

#India #Youngster #Euthanasia #HighCourt #L4
Prasu
3 months ago
இந்தியாவில் முதல் முறையாக கருணை கொலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்தவர் 32 வயதான ஹரிஷ் ராணா. 

2013ம் ஆண்டு கல்லூரி மாணவராக இருந்தபோது விடுதியின் 4வது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் கோமா நிலைக்கு சென்றார். 

கடந்த 13 ஆண்டுகளாக ஹரிஷ் ராணா கோமா நிலையில் இருந்து வருகிறார். அவரின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

உணவுக் குழாய்கள் மூலமே அவருக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்த நியூட்ரிஷன் உணவு மற்றும் தண்ணீர் அளிக்கப்பட்டு வருகிறது.

ராணாவை கருணைக் கொலை செய்ய 2024ல் அவரது பெற்றோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெபி பர்திவாலா, கேவி விஸ்வநாதன் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

பெற்றோர், ராணாவுக்கு குழாய் மூலம் உணவளிப்பதை நிறுத்தி அவரை கருணை கொலை செய்ய நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். இந்தியாவில் ஒருவரை கருணைக் கொலை செய்ய அனுமதி வழங்கப்பட்ட முதல் தீர்ப்பு இதுவாகும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4