பிரித்தானிய மன்னரை சந்திக்க உள்ள கனேடிய பிரதமர்
கனடிய பிரதமர் மார்க் கார்னி, எதிர்வரும் மார்ச் 16ம் திகதி பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸைச் சந்தித்துப் பேசவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நோர்வே மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளுக்கான தனது உத்தியோகபூர்வ ஐரோப்பிய பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் இந்தச் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார்.
2025ல் பதவியேற்றது முதல் ஐரோப்பிய நாடுகளுடனான உறவை வலுப்படுத்துவதில் பிரதமர் கார்னி அதிக ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆர்க்டிக் பிராந்தியம் மற்றும் நேட்டோ அமைப்பில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், நட்பு நாடுகளுடன் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது இப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.
பிரதமர் தனது பயணத்தை நோர்வேயில் தொடங்குகிறார். அங்கு ஆர்க்டிக் வட்டத்திற்கு மேலே நடைபெறும் "கோல்ட் ரெஸ்பான்ஸ்" என்ற நேட்டோவின் இராணுவப் பயிற்சியைப் பார்வையிடவுள்ளார்.
அத்துடன் நோர்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோரைச் சந்தித்து வர்த்தகம், தூய்மையான எரிசக்தி மற்றும் விண்வெளி ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கவுள்ளார்.
(வீடியோ இங்கே )