பண்டிகைக் காலத்தில் அரிசி விலை உயருமா? வெளியான அறிவிப்பு!

#SriLanka #Festival #prices #release #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
1 hour ago
பண்டிகைக் காலத்தில் அரிசி விலை உயருமா? வெளியான அறிவிப்பு!

இலங்கையில் அரிசி விலையை நிர்ணயிக்கும் முக்கியமான அரிசி வர்த்தக மையமாக கருதப்படும் மரதகஹமுல களஞ்சிய வளாகம் தற்போது அரிசி கையிருப்பால் நிரம்பியுள்ளது என வர்த்தக, வாணிப மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மரதகஹமுல கூட்டுறவு மொத்த வர்த்தக நிறுவனத்திற்குச் சொந்தமான களஞ்சியங்களை பார்வையிட்டபோதே, இதனை குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில், கடந்த 13 ஆண்டுகளாக ஒரு நெல் மூட்டையோ அல்லது அரிசி மூட்டையோ கூட சேமிக்கப்படாமல் இருந்த களஞ்சியம் தற்போது அரிசியால் நிரம்பியிருப்பது ஒரு முக்கிய முன்னேற்றமாகும்.

மேலும், சுமார் 75,000 மெட்ரிக் டன் நெல் சேமிக்கக்கூடிய திறன் கொண்ட இரண்டு களஞ்சியங்கள் நீண்டகாலமாக சேதமடைந்து புறக்கணிக்கப்பட்டிருந்தது தேசிய இழப்பாகும்.

தனது அரசின் கீழ் அந்த களஞ்சியங்களுக்கு மீண்டும் உயிர் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேநேரத்தில், அரசாங்கத்திடம் போதுமான அளவு அரிசி கையிருப்பில் இருப்பதால், வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் அரிசி விலை அதிகரிக்காது என்று கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!