கரூரில் தனியார் கல்லூரி பேருந்து மீது மோதிய சரக்கு ரயில் - 18 பேர் படுகாயம்

#India #School #Accident #Hospital #Bus #Train #L4
Prasu
2 hours ago
கரூரில் தனியார் கல்லூரி பேருந்து மீது மோதிய சரக்கு ரயில் - 18 பேர் படுகாயம்

கரூர் மாவட்டம் தாந்தோணி வட்டத்தில் வெள்ளியணை அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தை தனியார் கல்லூரி பேருந்து ஒன்று கடக்க முற்பட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக தண்டவாளத்தில் கல்லூரி பேருந்து சிக்கிக்கொண்டது. 

அப்போது அந்த தண்டவாளத்தில் தனியார் சிமெண்ட் ஆலைக்கு ஜல்லி கற்களை ஏற்றிச்சென்ற சரக்கு ரெயில் வேகமாக வந்தது. அந்த சரக்கு ரெயில் தண்டவாளத்தில் சிக்கிய கல்லூரி பேருந்து மீது மோதியது.

இந்த சம்பவத்தில் தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த கல்லூரி பேருந்து சேதமடைந்தது. இதில் பேருந்தில் இருந்த 18 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்தையறிந்து விரைந்து சென்ற அக்கம்பக்கத்தினர் காயமடைந்த மாணவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 

படுகாயமடைந்த மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!