ஈரானிய போரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும்

#America #Attack #Iran #L4 #DonaldTrump
Prasu
3 months ago
ஈரானிய போரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும்

ஈரானின் ஹோர்மூஸ் நீரிணை ஊடாக நாளாந்தம் 14.9 மில்லியன் கச்சாய் ஏண்ணை பரல்களை ஏற்றிய கப்பல்கள் பயணம் செய்கின்றன. இதில் 05 மில்லியன் பரல் கச்சாய் எண்ணை நாளாந்தம் சீனாவிற்கு செல்கின்றது.

அமெரிக்கா ஈரானை தாக்குவதன் மூலம் ஈரான் ஏற்றுமதி செய்யும் கச்சாய் எண்ணையில் 99 வீசம் சீனாவிற்கே செல்கின்றது அதனை தடுப்பது. இது சீனாவின் இறக்குமதி செய்யப்படும் கச்சாய் ஏண்ணையில் 13 வீதமாகும். 

அதே போல் ஹோர்மூஸ் நீரிணைவழியாக சீனா கொண்டு செல்லும் ஏனைய 05 மில்லியன் பரல் கச்சாய் எண்ணையும் அதன் இறக்குமதியில் 43 வீதமாகும் .

உண்மையில் அமெரிக்காவின் மூலோபாய திட்டம் சீனாவை கச்சாய் ஏண்ணை மூலம் நெருக்கடிக்குள் தள்ளுவது. ஏனைய 9.9 மில்லியன் பரல்களில் அதிகளவான கச்சாய் எண்ணை இந்தியாவிற்கே செல்கின்றது .

images/content-image/1773605379.jpg

சீனா , இந்தியா ஆகிய இரண்டு நாடுகளையும் கச்சாய் எண்ணை மூலம் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளி இந்த நாடுகளில் பொருளாதார குழப்பங்களை உண்டு பண்ணி இந்த நாடுகளின் பின்னால் இழுபடும் சிறிய நாடுகளை முற்று முழுதாக பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளுவது இதன் மூலம் உலகளாவிய பொருளாதார போரில் இரத்தம் சிந்தாது அமெரிக்கா வெற்றி பெறும். 

உலகில் இந்த சிறிய வறிய நாடுகளில் இலகுவாக இறங்கி அவற்றின் இதுவரை எடுக்கப்படாதா எண்ணை வளங்களை அள்ளிச்செல்வது. உதாரணமாக இலங்கையில் அதன் இன்றைய எரிபொருள் தேவையுடன் ஒப்பிட்டால் 200 வருடங்களிற்கு தேவையான மசகு எண்ணை மன்னார் வளைகுடாவில் இருக்கின்றது. 

இந்த பொருளாதார போர் உத்தி இரண்டாம் உலகப்போரின் மூலம் உலக நாடுகளை ஆக்கிரமித்து அவற்றின் வளங்களை வல்லரசு நாடுகள் சுரண்டிச்சென்ற உத்திக்கு சமமானது. இப்போது இந்த சச்சாய் எண்ணையின் முழுமையான சுரண்டலை 2029 ஆம் ஆண்டுக்குள் முடித்து விட டிரம்ப் விரும்புகின்றனர். 

images/content-image/1773605394.jpg

இந்த இரண்டு வருட சுரண்டல் காலத்தில் இலங்கை போன்ற சிறிய வறிய நாடுகள் பசி , பட்டினி என்பவற்றால் பிளந்து விடுவது . ஒரு அரசானது அதன் ஆட்புல எல்லைக்குட்பட்ட மக்கள் அனைவருக்கும் உணவு , மருந்து உட்பட்ட அத்தியாவசிய பொருட்கள் , சேவைகளை வழங்க கடமைப்பட்டுள்ளன. 

அதனை அரசுகளால் செய்ய முடியவில்லை என்றால் அதன் இயலாமைக்கு அப்பாற்பட்ட மக்கள் கூட்டத்தை தனித்து செல்ல அனுமதிக்க வேண்டும். இது சர்வதேச சட்டம். சர்வதேச சட்டம் என்பது வல்லரசு நாடுகள் சிறிய நாடுகளை கட்டுப்படுத்த தயாரித்த ஆயுதங்கள் தான். இவை வல்லரசு நாடுகளை ஒருபோதும் திரும்ப தாக்காது. 

இந்த பொருளாதார சிக்கல் காரணமாக தான் சோவியத் ஒன்றியம் உடைந்து சிதறியது. சோவியத்தை சிதறடிக்கும் திட்டம் அமெரிக்காவின் இரத்தம் சிந்தா யுத்தம் எனும் மூலோபாய கொள்கை வகுப்பு . அதே போல் இந்திய ஒன்றியத்தை உடைத்து பல நாடுகள் உருவாக்குவது , இலங்கை போன்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் இருக்கும் நாடுகளை பொருளாதார கஸ்டத்தின் மூலம் உடைத்து இரண்டாக பிளப்பது . 

images/content-image/1773605444.jpg

இப்படி மிகப்பெரிய நாடுகளை உடைந்து பல நாடுகளை உருவாக்குவது , சிறிய நாடுகளை இரண்டாக உடைப்பது இதன் மூலம் அமெரிக்கா சார்பு நாடுகளை உலகத்தில் அதிகரிப்பது அதாவது மத்திய கிழக்கு போல இந்து சமுத்திர பிராந்தியத்தில் பல புதிய நாடுகளை உருவாக்கி நட்பு நாடுகள் ஆக்கி அங்கே அமெரிக்க தளங்களை நிறுவுவது. 

தென்சீன கடலை கட்டுப்படுத்த அங்கும் மத்திய கிழக்கு போல பல நாடுகளை உருவாக்குவது இதன் மூலம் தென்சீன கடல் பிராந்தியத்தில் அமெரிக்கா தளங்களை நிறுவுவது இதன் மூலம் அடுத்த 100 வருடங்களிற்கு தேவையான வளங்களை தங்கு தடையின்றி அமெரிக்காவில் கொண்டு சென்று குவிப்பது தொடர்ந்தும் அடுத்த 100 வருடங்களிற்கு உலக பொரு வல்லரசாக வலம் வருவது . 

சரி இது எல்லாம் உங்களிற்கு எப்படி தெரியும் என நீங்கள் கேட்பது புரிகின்றது. அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் வேறு அமரிக்க அதிபர்கள் வேறு . டிரம்ப் உட்பட முன்னும் பின்னும் எத்தனை ஜனாதிபதிகள் வந்தாலும் அவர்கள் அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் வகுத்து வைத்த 50 , 100 வருட திட்டத்தையே செயற்படுத்த முடியும் .

அதிபர் என்ற முறையில் அதை செய்து முடிக்க இராணுவத்தை பயன்படுத்த , ஏனைய நாடுகள் மீது போர் தொடுக்கும் தீர்மானத்தை எடுக்க அதிகாரம் அதிபர்களிற்கு உண்டு. ஏதோ எதிர்ப்பது போல பூச்சாண்டி காட்டிவிட்டு அமெரிக்க நாடாளுமன்றமும் இதற்கு கை உயர்த்தியே ஆகவேண்டும் இதுதான் அமெரிக்க கொள்கைவகுப்பாளர்களின் பலம். 

இறுதியாக டிரம்ப் செயல்படுத்துவது அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களின் நீண்ட கால திட்டத்தை போன்ற மனநிலை உள்ள ஒருவர் சர்வவல்லமை பொருந்திய அமெரிக்க அதிபர் கதிரையில் அமர்ந்தால் இப்போது நடப்பதை விட மோசமான போர் , பொருளாதார போர், வளச்சுரண்டல் எல்லாம் நடக்கும். 

உலக அமைதி , சமாதானம் , பொருளாதாரம் எதைப்பற்றியும் சிந்திக்காத அமெரிக்க கடும் தேசியவாதி ஒருவர் அமெரிக்காவிற்கு அதிபர் ஆகினால் உலகிற்கு என்ன நடக்கும் என்பதே இன்றைய காலச்சக்கரம் சுழன்று வந்து நிற்கும் இடம். 

ஈரான் அமெரிக்கா போர் பல மாதங்கள் நீண்டு செல்லும் ஏதேனும் காரணத்தால் இடைநடுவே நின்றாலும் அடுத்த மூன்று மாதத்தில் மீண்டும் தொடங்கும். இந்த 2026 ஆம் ஆண்டு போரால் உலக நாடுகள் பல பிரிந்து பல புதிய நாடுகள் உருவாக அத்திவாரம் இடப்படும் ஆண்டு.

ஆய்வாக்கம் 

சண்முகநாதன் புவி

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4