ஹட்டனில் மீண்டும் நீண்ட எரிபொருள் வரிசை: QR முறை இருந்தும் சாரதிகள் அவதி!
#SriLanka
#QRcode
#Driver
#Long
#system
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
#L4
Abi
1 hour ago
ஹட்டன் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில், எரிபொருள் பெறுவதற்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
QR குறியீட்டு முறைக்கு அமைய எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கையிருப்பில் உள்ள எரிபொருள் தீர்ந்துவிட்டதால், அந்த நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இதனால், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகாமையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் தரித்து நிற்பதை அவதானிக்க முடிந்தது.
எரிபொருள் விநியோகம் சீராக இல்லாத காரணத்தினால், வாகன உரிமையாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்