இந்தியாவில் பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய 6 வெளிநாட்டினர் கைது

#India #Arrest #America #Attack #Ukraine #L4
Prasu
3 months ago
இந்தியாவில் பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய 6 வெளிநாட்டினர் கைது

இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக கூறி, 6 உக்ரைனியர் மற்றும் ஒரு அமெரிக்கரை தேசிய புலனாய்வு முகமை(NIA) கைது செய்துள்ளது.

வெளிநாட்டு விசா மூலம் இந்தியா வந்த இவர்கள், சட்டவிரோதமாக மிசோராமிற்கு சென்று அங்குள்ள இந்தியாவிற்கு எதிரான குழுக்களை சந்தித்து பேசியுள்ளனர்.

அதன் பின்னர் மிசோரம் வழியாக மியான்மருக்கு சென்று அங்கு பயிற்சி பெற்று சில இனக்குழுக்களுக்கு பயிற்சியும் வழங்கியுள்ளனர்.

அதனை தொடர்ந்து, ஐரோப்பாவில் இருந்து ஏராளமான ட்ரோன்களை மிசோரமிற்கு இறக்குமதி செய்து, இந்தியாவிற்கு எதிரான குழுக்களுக்கு வழங்கியதும் தெரிய வந்துள்ளது.

இந்தியாவிலிருந்து அவர்கள் தங்களின் தாயகம் திரும்பும் போது விமான நிலையங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4