நாளை முதல் வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கு அமைய எரிபொருள் விநியோகம்!

#SriLanka #vehicle #licences #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
2 months ago
நாளை முதல் வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கு அமைய எரிபொருள் விநியோகம்!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையின் கீழ், வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கு அமைய எரிபொருளை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை நாளை (19) முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

தற்போதைய எரிபொருள் விநியோக சவால்களை முறையாக முகாமைத்துவம் செய்வதற்காக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருண இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கம் இரட்டை எண்களாக அல்லது பூச்சியமாக (0, 2, 4, 6, 8) முடிவடையும் வாகனங்களுக்கு இரட்டை எண்களைக் கொண்ட திகதிகளில் (உதாரணமாக: மார்ச் 18, 20, 22...) எரிபொருள் விநியோகிக்கப்படும்.

வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கம் ஒற்றை எண்களாக (1, 3, 5, 7, 9) முடிவடையும் வாகனங்களுக்கு ஒற்றை எண்களைக் கொண்ட திகதிகளில் (உதாரணமாக: மார்ச் 19, 21, 23...) எரிபொருள் விநியோகிக்கப்படும்.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4