மகாராஷ்டிராவில் 6ம் வகுப்பு சிறுமி மீது ஆசிட் வீச்சு

#India #Hospital #children #Attack #maharashtra #L4
Prasu
3 months ago
மகாராஷ்டிராவில் 6ம் வகுப்பு சிறுமி மீது ஆசிட் வீச்சு

மகாராஷ்டிராவில் பள்ளி சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த 13 வயதான 6ம் வகுப்பு சிறுமி மீது ஆசிட் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

மகாராஷ்டிராவின் அகில்யநகர் மாவட்டத்தில் உள்ள வட்காவ்ன் பான் கிராமத்தில் குறித்த சிறுமி பள்ளியிலிருந்து வீட்டிற்கு சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

அவ்வழியே வந்த ஒரு இரு சக்கர வாகன ஓட்டுநர் சிறுமியை நிறுத்தி, வழி கேட்பது போல் பாசாங்கு செய்தார். சிறுமி சைக்கிளை நிறுத்திய உடனேயே, அவர் ஆசிட் திரவத்தை அவள் முகத்தில் வீசியுள்ளார்.

அந்தச் சிறுமி தற்போது லோனியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், அவரது உடல்நிலை சீராக உள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4