இலங்கையில் பெண்ணொருவர் நிகழ்த்தப்போகும் கின்னஸ் சாதனை

#SriLanka #Jaffna #Canada #Women #WorldRecord #L4
Prasu
3 months ago
இலங்கையில் பெண்ணொருவர் நிகழ்த்தப்போகும் கின்னஸ் சாதனை

இலங்கையில் கின்னஸ்(Guinness) உலக சாதனை ஒன்றை பெண் ஒருவர் நிகழ்த்தவுள்ளார். இச்சாதனையை யாழ்ப்பாணத்தில் பிறந்து கனடா நாட்டில் வசித்து வரும் குமுதினி கோபாலகிருஷ்ணன் அவர்களே நிகழ்த்தவுள்ளார். 

பெண்களாலும் உலக சாதனைகளை படைக்கமுடியும் என்ற செய்தியை உலகிற்கே பறைசாற்றும் முகமாக இச் சாதனை இடம்பெறவுள்ளது.

images/content-image/1773938254.jpg

தனது நீண்ட கால முயற்சியின் பலனாக கின்னஸ் உலக சாதனை ஒன்றை குமுதினி கோபாலகிருஷ்ணன் நிகழ்த்தவுள்ளார்.

இந்த கின்னஸ் உலக சாதனையானது, எதிர்வரும் 01.04.2026 அன்று மாலை 6.00க்கு A-09 வீதி திருமுறுகண்டியில் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

images/content-image/1773938276.jpg

முதன்முறையாக கின்னஸ் உலக சாதனை ஒன்று இடம்பெறுவதை, நேரடியாக பார்வையிடும் சந்தர்ப்பம் இலங்கைவாழ் மக்களுக்கு கிட்டியுள்ளது.

images/content-image/1773938295.jpg

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4