எரிபொருள் அனுமதிப்பத்திர உதவிக்கு புதிய இலக்கம் அறிமுகம்!

#SriLanka #government #Fuel #ImportantNews #number one #L4
Lakhi
5 hours ago
எரிபொருள் அனுமதிப்பத்திர உதவிக்கு புதிய  இலக்கம் அறிமுகம்!

தேசிய எரிபொருள் கிவ் ஆர் முறைமையில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக புதிய உடனடி உதவிச் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் பதிவு செய்யும் போதோ அல்லது முறைமையைப் பயன்படுத்தும் போதோ எதிர்கொள்ளும் தொழில்நுட்பப் பிரச்சினைகள் மற்றும் தடைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கியலேயே இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வாகனங்களைப் பதிவு செய்யும் போது ஏற்படும் ஏதேனும் சிக்கல்களுக்கு உதவி பெறுவதற்கு 076 019 1919 என்ற இலக்கத்திற்கு WhatsApp ஊடாக அனுப்ப முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சேவையின் மூலம் குறித்த கிவ்ஆர் முறைமையைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் என்பன வழங்கப்படுகின்றன. அத்துடன், மோசடி நடவடிக்கைகள் அல்லது இந்த முறைமையைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் குறித்த தகவல்களை வழங்கவும் முடியும் என்றும் டிஜிட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காகப் பதிவு செய்வதற்கு அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட உத்தியோகபூர்வ இணையதளமான www.fuelpass.gov.lk என்பதை மாத்திரம் பயன்படுத்துமாறும் டிஜிட்டல் அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!