யாழில் அதிபர் இடமாற்றத்தால் முடங்கிய பாடசாலை: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

#SriLanka #Jaffna #School #School Student #ImportantNews #Principal #Transfer #Parents #L4
Lakhi
3 months ago
யாழில் அதிபர் இடமாற்றத்தால் முடங்கிய பாடசாலை: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

யாழ்ப்பாணம் வடமராட்சி கரணவாய் பகுதியில் உள்ள யா/ கரணவாய் வேதாரணியேஸ்வரா வித்தியாலயத்தில் கடந்த ஐந்து மாதங்களாக அதிபர் நியமிக்கப்படாத நிலைமை பெரும் கவலைக்குரியதாக மாறியுள்ளது.

சுமார் 150 மாணவர்கள் கல்வி கற்கும் இப்பாடசாலையில் முன்னாள் அதிபர் கடந்த 2025 ஒக்டோபர் ஒன்பதாம் திகதி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து இதுவரை நிரந்தர அதிபர் நியமனம் செய்யப்படவில்லை. இந்தநிலையில் தற்போது சிரேஷ்ட ஆசிரியர் ஒருவர் பதிலதிபராகக் கடமையாற்றி வருகிறார். இதனால் பாடசாலை நிர்வாகம் மற்றும் கல்வி முன்னேற்ற நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன எனப் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

images/content-image/2024/03/1774067783.jpg

இந்நிலையில், புதிய அதிபரை உடனடியாக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி பெற்றோர் நேற்று (20-03-2026) பாடசாலை முன்பாகக் கையெழுத்துச் சேகரிப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். ஆளுநருக்கு மகஜர் கையளிக்கும் நோக்கில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களுடன் இணைந்து மதத் தலைவர்கள் மற்றும் கிராம மக்கள் பலரும் தங்களின் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4