கொழும்பு துறைமுகத்தை வலம் வந்த அமெரிக்காவின் முக்கிய பிரதிநிதி!
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க சிறப்புத் தூதுவர் செர்ஜியோ கோர், கொழும்பு துறைமுகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
குறித்த விஜயமானது, நேற்றையதினம்(20) வெள்ளிக்கிழழை மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகிறது. இந்த விஜயத்தின் போது, அவர் இலங்கை துறைமுக ஆணையத் தலைவருடன் இணைந்து துறைமுக செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு, சர்வதேச வர்த்தகத்தை பாதுகாப்பாக வைத்திருக்க கடல்சார் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பு துறைமுகம் தெற்காசியாவை உலக சந்தைகளுடன் இணைக்கும் முக்கிய மையமாக இருப்பதால், அமெரிக்கா–இலங்கை கூட்டாண்மை மூலம் பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான வர்த்தகத்தை மேம்படுத்தவும், துறைமுக செயல்திறனை உயர்த்தவும், சர்வதேச விநியோக சங்கிலியின் நம்பகத்தன்மையை பாதுகாக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்த நடவடிக்கைகள் அமெரிக்க உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோரின் பொருளாதாரத்திற்கும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்