யாழ்ப்பாணத்தில் முட்டை விலைகள் சடுதியாக அதிகரிப்பு!

#SriLanka #Jaffna #Egg #ImportantNews #L4
Lakhi
3 months ago
யாழ்ப்பாணத்தில் முட்டை விலைகள் சடுதியாக அதிகரிப்பு!

வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்தில் QR முறைமை (QR fuel quota) மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இவ்விலையதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தென்பகுதியிலிருந்து கொண்டுவரப்படும் முட்டைகள், எரிபொருள் வரையறைக்கு முன்னதாக 28 ரூபா முதல் 32 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளன.

இருப்பினும், தற்போது நிலவும் போக்குவரத்து இடர்பாடுகள் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஒரு முட்டையின் விலை 38 ரூபா முதல் 42 ரூபா வரை உயர்ந்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

அத்தியாவசிய உணவுப் பொருளான முட்டையின் இந்தத் திடீர் விலை உயர்வு, சாதாரண பொதுமக்களைப் பெரிதும் பாதித்துள்ளதுடன், சந்தையில் முட்டை விநியோகமும் மந்தகதியில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளை அறிய தொடர்ந்தும்
 https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4