இலங்கையில் பெரிய தொகையால் குறைந்த தங்கவிலை!!
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்திற்கு மத்தியில், இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் பாரிய சரிவைக் கண்டுள்ளது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,494 டொலராக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 68.02 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை பாரிய சரிவை சந்தித்ததையடுத்து இலங்கையிலும் தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் 10,000 ரூபாவால் குறைந்துள்ளது.
அதன்படி இலங்கையில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 378,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 347,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,250 ரூபாயாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,475 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்