மாற்றத்தின் பின்னால் மறைந்திருக்கும் மர்மம் - ஜனாதிபதிக்கு மனோ எச்சரிக்கை

#SriLanka #Warning #President #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
3 months ago
மாற்றத்தின் பின்னால் மறைந்திருக்கும் மர்மம் - ஜனாதிபதிக்கு மனோ எச்சரிக்கை

எரிவாயு, எரிபொருள் மற்றும் மருந்து கொள்வனவுகளில் நிலவும் ஏகபோகக் கூட்டணிகளை முறியடிப்பதாக ஜனாதிபதி கூறினாலும், அரசாங்கத்திற்குள் புதிய மாஃபியாக்கள் உருவாகி வருவதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எச்சரித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது, ஏகபோகங்களை உடைப்பதற்கான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் முயற்சிகளைப் பாராட்டிய அதேவேளை, இந்த ஆபத்து குறித்தும் தாம் சுட்டிக்காட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்ட சில பெருநிறுவனங்கள், தற்போது வெவ்வேறு போர்வைகளில் இந்த ஏகபோகச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

"இவர்கள் பழைய முகங்கள் அல்ல. ஆனால், ஒரு ஏகபோகக் கூட்டணியை நீக்கிவிட்டு, மற்றொரு புதிய கூட்டணியைப் பதிலீடு செய்வதால் மக்களுக்கு எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை" என அவர் தனது 'X' தளப் பதிவில் பதிவிட்டுள்ளார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு மத்தியில், இவ்வாறான புதிய 'மாஃபியாக்கள்' உருவாவதைத் தடுக்க வேண்டியதன் அவசியத்தை மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4