ஜனாதிபதி செயலக வாகனங்களின் எண்ணிக்கை குறைப்பு!!
ஜனாதிபதி செயலகம் தற்போது 634 வாகனங்களைப் பயன்படுத்தி வருவதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று (20) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய வாய்மூல வினாவுக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இந்த விபரங்களை வெளியிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவிக்காலத்தில் ஜனாதிபதி செயலகத்தினால் 833 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இந்த எண்ணிக்கை 200 இற்கும் அதிகமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், ஜனாதிபதி செயலகத்தினால் பயன்படுத்தப்பட்ட சுமார் 60 வாகனங்கள் ஏனைய அரச நிறுவனங்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளன.
அரசாங்கம் வீண் விரயங்களைக் குறைப்பதாகப் போலி வாக்குறுதி அளித்ததா எனவும், 600 இற்கும் அதிகமான வாகனங்கள் இன்னும் பயன்படுத்துவது ஏன் எனவும் உறுப்பினர் விஜேசிறி கேள்வி எழுப்பினார்.
வாகனப் பயன்பாட்டைக் குறைப்பதாகவே அரசாங்கம் உறுதியளித்தது, அதனைத் தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளோம் எனப் பிரதமர் விளக்கமளித்தார்.
வாகனப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அரச செலவீனங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனப் பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார்.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்