எரிசக்தி நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி: எண்ணெய் குதங்களை புனரமைக்க தீர்மானம்!

#SriLanka #government #AnuraKumaraDissanayake #NPP #Vijitha Herath
Soruban
3 months ago
எரிசக்தி நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி: எண்ணெய் குதங்களை புனரமைக்க தீர்மானம்!

இலங்கையின் தற்போதைய எரிசக்தி நெருக்கடிக்கு நீண்டகால மற்றும் நிலையான தீர்வாக, திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஒத்துழைப்புடன் துரிதமாகப் புனரமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது குறித்து 'த இந்து' நாளிதழுக்குக் கருத்துத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இரண்டாம் உலகப் போர் காலத்து எண்ணெய் சேமிப்பு வசதிகளை மீளமைப்பதன் மூலம் எரிபொருள் விநியோக சவால்களுக்கு ஒரு நிரந்தர தீர்வை எட்ட முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையை ஒரு பிராந்திய எரிசக்தி மையமாக (Regional Energy Hub) மாற்றுவதற்காக, கடந்த 2025 ஏப்ரலில் இலங்கை, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கிடையே கையெழுத்திடப்பட்ட முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

முன்னர் இத்திட்டத்தில் இந்தியத் தலையீட்டைத் தேசிய மக்கள் சக்தி எதிர்த்து வந்த போதிலும், தற்போதைய உலகளாவிய போர்ச் சூழல் மற்றும் எரிபொருள் விநியோகப் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு இந்த விவகாரத்தில் கொள்கை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது எரிசக்தி அமைச்சினால் தொழில்நுட்ப அம்சங்கள் மீளாய்வு செய்யப்பட்டு வருவதுடன், விரைவில் இது கேள்விப்பத்திர நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4